நிறைவேற்று அதிகாரத்தினால் தான் நாட்டை முன்னேற்ற முடிந்தது!

நிறைவேற்று அதிகாரம் என்ற  ஒன்று ஜனாதிபதிக்கு உள்ளபடியால் தான்  நாட்டை இந்தளவிற்கு முன்னேற்றக் கூடியதாகவுள்ளது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கு தற்போது எங்களுக்கு எவ்வித யோசனையும் இல்லை.

ஆனால் அனைவரினதும் கோரிக்கைக்கு அமைவாக அவ்வாறானதொரு மாற்றம் ஏற்படுமானால் அதனை நாங்கள் எதிர்க்க மாட்டோம்.

ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்தும் நாங்கள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருக்கின்றோம்.

இல்லாத ஒன்றை பிடித்துக்கொண்டு எதிர்கட்சியினர் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

எதிர்கட்சியினர் கூறுவது போல் எந்தவொரு விடயமும் தற்போது அரசியலில் நடைபெறவில்லை” இவ்வாறு லக்ஸ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்