வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்

வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம் இன்று மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அரங்காலயா கலைக்கூட கலைஞர்களினால் குறித்த உளநலன் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டிருந்தது.

வவுனியா பிரதேச செயலகமும், மாவட்ட பொது வைத்தியசாலை உளநல பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் உளநல வைத்தியர் எஸ். சுதாகரன், வைத்தியர் திருமதி வைதேகி திலீபன், மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுகாசினி சிவதர்சன், உளநலத்துறை உத்தியோகத்தர் திருமதி துஷாந்தன் பிரியதர்சினி, பாடசாலையின் அதிபர் நா. இந்திரகுமார், ஈச்சங்குளம் கிராம சேவகர் ஜே. அமலதாஸ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

          

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.