விபத்தில் சிக்கி உயிரிழந்த பருத்தித்துறை பொலிஸ் நிலைய பெண் கான்ஸ்டபிள்

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் தலகிரியாகம பகுதியில் மோட்டார் சைக்கிளும் ரிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக தலகிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதான பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான இவர் விடுமுறையில் வீடு வந்திருந்தபோதே இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தல்கிரியாகம பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்