லயன்ஸ் கழகங்களின் ஏற்பாட்டில் சர்வதேச வெள்னைப் பிரம்புதினம்!

லயன்ஸ் கழகங்களும் வாழ்வக சமூகமும் இணைந்து நடத்தும் சர்வதேச வெள்ளைப் பிரம்புதினம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லயன்ஸ் கழக வெள்ளைப் பிரம்புதின இணைப்பாளர் லயன் மகாதேவா பிரிதுவிராஜா தலைமையில் நடைபெற உள்ளது.

லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம். பீற்றர் – லயன் சாவித்திரி பீற்றர் ஆகியோர் பிரதம விருந்தினராகப் பங்குகொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சுன்னாகம் கொமர்சல் வங்கிக்கு முன்பாக விழிப்புலனற்ற சிறுவர்களுக்கு வெள்ளைப் பிரம்புகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வுப் பேரணி சுன்னாகம் சந்தியை அடைந்து அங்கிருந்து பஸ் தரிப்பு நிலையத்தைச் சென்றடைந்து அங்கு வாழ்வகத் தலைவரால் வெள்ளைப் பிரம்பு தொடர்பான விழிப்புணர்வு உரை இடம்பெற்று பின்னர் மீண்டும் சுன்னாகம் சந்தியை சென்றடைந்து வாழ்வகத்தைச் சென்று பேரணி நிறைவுபெறும்.

அதனைத் தொடர்ந்து வாழ்வக ஸ்தாபகர் கலாநிதி அன்னலட்சுமி அம்மாவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட இணைப்பாளர் லயன் மா.பிரிதுவிராஜா, வாழ்வகத் தலைவர் ஆ.இரவீந்திரன் ஆகியோர் இணைத் தலைமையில் வாழ்வக அரங்கில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெறும். அதேநேரம் லயன்ஸ் கழகங்களால் வாழ்வகத்துக்கு சேவைத்திட்டங்களும் சகல லயன்ஸ் கழகங்களாலும் தனித்தனியாக வழங்கப்படும். மதியம் 12 மணிக்கு மதிய விருந்துடன் கூட்டம் நிறைவடையும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.