நடிகர் ஜக்சனின் பூதவுடலுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி!

மறைந்த நடிகர் சகலகலா சக்திய ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் கடவத்த பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பொரளையில் உள்ள ஜெயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், ஜாக்சன் அந்தோணியை விரும்பும் ரசிகர்கள் என ஏராளமானோர் வருகை தந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

பொரளையில் உள்ள மலர் சாலையில் காலை 07.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரை வைக்கப்பட்டிருந்த பூதவுடல் செவ்வாய்க்கிழமை இரவு கடவத்தையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

புதன், மற்றும் வியாழன் அவரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் ராகம புனித பீட்டர் பால் தேவாலயத்தில் இடம்பெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்