பாதாளக் குழுக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது!

நாட்டில் பாதாளக் குழுவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் இதுவரை பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இலங்கை வரலாற்றில் இவ்வாறு பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படாதமை இது இரண்டாவது தடவையாகும். இந்நிலையில், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக கடந்தக காலங்களில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், எமது நாட்டில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லை. எனவே, அரசாங்கம் உடனடியாக பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும்” இவ்வாறு ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்