கொழும்பில் உதயமாகும் தமிழர் கல்வி மேம்பாட்டுக் கழகம்

தமிழ் சமுதாயத்தின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில்  தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம்  எனும் அமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனினால் கொழும்பில்  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் போது  தமிழர் கல்வி மேம்பாட்டு கழகத்தின் போசகராக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும், தலைவராக ப. பரமேஸ்வரனும்,   செயலாளராக திருமதி. கே. நிரஞ்சன் செயலாளராகவும், நிதி செயலாளராக எம். ஜெயப்பிரகாஷும் நியமிக்கப்பட்டனர்.

அத்துடன் ஏனைய பதவிகளுக்கான நியமனங்கள் விரைவில் அறிவிக்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பேராசிரியர் டி. தனராஜ், தொழிட்நுட்ப அமைச்சு பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் மற்றும் கல்வியமைச்சின் முன்னாள் செயற்திட்ட அதிகாரி க. பத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்