கல்குடா – ஓட்டமாவடிக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் குடியிருப்பு பிரதேசத்திற்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் சொத்துக்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வியாழக்கிழமை (12) நள்ளிரவு ஓட்டமாவடி ஆற்றின் ஊடாக பிரதேசத்திற்குள் புகுந்த யானை ஓட்டமாவடி 02 ஜீ.எஸ்.ஓ.வீதியில் உள்ள இரண்டு வீட்டின் மதில்கள் மற்றும் பயன்தரக்கூடிய மரங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.

இரவு யானையின் அட்டகாசத்தின் போது வீட்டில் இருந்த சிறுவர்களும் பெண்களும் மிகவும் அச்சத்தில் இருந்ததாகவும் எங்களுக்கு இப் பகுதிக்கு வருடா வருடம் யானைகளின் தொல்லை இருப்பதாகவும் இதற்கு உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தருமாறும் கோறிக்கை விடுக்கின்றனர்.

ஊரின் ஓட்டமாவடி பிரதேசத்தின் சன நெரிசல்மிக்க பிரதான பகுதிக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளமையினால் ஓட்டமாவடிப் பிரதேச மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.