விபுலானந்தர் மணி மண்டபம் கல்முனையில் திறந்துவைப்பு!

 

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மீளப் புனரமைக்கப்பட்ட விபுலானந்தர் மண்டபம் கடந்த புதன்கிழமை காலை அதிபர் திருமதி விஜயசாந்தினி நந்தபால தலைமையில் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் விருந்தினர்களாக சிவஸ்ரீ சச்சிதானந்தக் குருக்கள், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.சரவணமுத்து, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஆ.சஞ்சீவன், வி.ரி.சகாதேவராஜா, கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் சமூகசேவையாளருமான சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக அதிதிகள் பான்ட் வாத்தியம், தமிழ் இன்னியம் சகிதம் வரவேற்கப்பட்டு, விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு, பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, விபுலானந்தர் மணிமண்டபம் திறந்துவைக்கப்பட்டது. மாணவர், ஆசிரியர்களின் கலைநிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. அதிதிகள் பாடசாலைச் சமுகத்தால் பொன்னாடை போர்த்து நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த 5 வருடங்களாக விபுலானந்தர் மணிமண்டபம் பழுதடைந்து இருந்த நிலையில் கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் வேண்டுகோளுக்கிணங்க லண்டனில் வாழும் பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி வனிதா இராஜகுமார் மண்டபத்தைப் புனரமைப்பதற்கு 20 லட்சம் ரூபாவை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்