முதிரை மரக் குற்றிகளை ஏற்றி வந்த பட்டாரக வாகனத்துடன் சாரதி கைது!

மாங்குளத்தில் இருந்து பட்டாரக வாகனம் ஒன்றில் முதிரை குற்றிகளை தேங்காய் பொச்சுக்களால் மறைத்து கடத்த முற்பட்ட வட்டுகோட்டையை சேர்ந்த 28 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மூன்று லட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்