தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது! திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும், மாகாணசபைத் தேர்தலையும் பிற்போட்டு, அரசாங்கம் ஏற்கனவே மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளது.

இந்த நிலையில், அடுத்தாண்டு செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.

எனவே, இந்தத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை.

இதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டால் நாம் அனைத்து தரப்பினருடனும் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளியிடுவோம்.

அரசாங்கத்திற்கு தேர்தல் ஒன்று தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் தேர்தலொன்றை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்