லண்டன் கனக துர்க்கை ஆலய உதவி வழங்கும் செயற்றிட்டம்!

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் முக்கியமான கல்வித் திட்டங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான மாதாந்த உதவி வழங்கும் செயற்றிட்டம் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 41 மாணவர்களுக்கு தொடர்ச்சியான இந்த உதவி வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

அந்த உதவித் திட்டத்தில் மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்குவதுடன் இந்த மாணவர்களுடனான விசேட சந்திப்பையும் மேற்கொள்ளும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை கல்லடி சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.