தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி!

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, உடலைத் தகனம் செய்வது பொருத்தமற்றது என்று பரிந்துரைத்திருந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பாக விசாரணை செய்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது.

அதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் ஷாப்டரின் மனைவி வாங்கிய காணியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் நடத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்