சட்ட விரோத மீன்பிடி உள்ளிட்ட செயற்பாடுகளால் வாழ்வாதாரமிழக்கும் தென்னமரவடி கிராம மக்கள்

!

தென்னமரவடி களப்பு பகுதியில் வெளி இடங்களில் இருந்துவரும் மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் மீன்பிடிப்பதால் தமது வளம் சுரண்டப்படுவதோடு வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தென்னமரவடி கிராமத்தில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலை தமது வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றார்கள். பெரும்பாலான மக்கள் சிறு கடல் பகுதியான களப்பு பகுதியில் இறால், நண்டு மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் பெருமளவு பெண்கள் படகுகள், வள்ளங்கள் இல்லாத நிலையில் நீந்திச் சென்று கைகளால் நண்டுகள், இறால்களை பிடித்து தமது நாளாந்த செலவுகளை ஈடுசெய்து வருகின்றார்கள்.

இந்நிலையில், வெளி இடங்களில் இருந்து இயந்திரப் படகுகளில் வருகின்ற மீனவர்கள் தமது இடங்களில் வாடிகளை அமைத்து சட்ட விரோதமான வலைகளை பயன்படுத்தியும், கூடுகளை கட்டியும் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் கடல்வளம் அழிக்கப்படுவதோடு தமக்கான கடல்வளத்தை தமது வாழ்வாதாரத்துக்காக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனைத் தட்டிக் கேட்டால், தமது வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துவதுடன் தங்களையும் தாக்குவதாகவும் அப்பகுதி மீனவர்கள் கவலையோடு கூறுகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்