8 மாதங்களில் 21 முச்சக்கரவண்டிகளைத் திருடி விற்று பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர் தெமட்டகொடையில் கைது

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கரவண்டிகளைத் திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெண்களுடன் செலவிட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் 8 மாதங்களில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 21 முச்சக்கரவண்டிகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறைந்த விலைக்கு முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்ய கிரிபத்கொடைக்கு ஒருவர் வந்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டாரவுக்கு தகவல் கிடைத்ததனையடுத்து, சந்தேக நபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது இந்த திருட்டுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்