ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று  அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு  மலரஞ்சலி செலுத்தினர்.

போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2000ஆம் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு, அவரது வீட்டின் மீதும்  கைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.