ஜானகவுக்கு அச்சுறுத்தல்: விசாரணைகள் சி.ஐ.டி.யிடம்!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளர்.

மேல் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகள் அந்த திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்  ஜானக ரத்நாயக்கவைக் கொலை செய்யாமலிருப்பதற்காக , 15 லட்சம் ரூபா கப்பம் கோரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தொடர்பில்   பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்தே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்