இலங்கையில் நடந்ததும், பாலஸ்தீனத்தில் நடப்பதும் ஒன்றுதான் என்கிறார் சுமந்திரன்

‘இலங்கையில் நடந்த போரும், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்றுவரும் போரும் ஒன்றுதான்’ என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையிலான இப்பேரானது அரசியல் மோதலாகும்.
இதனை அரசியல்ரீதியாகத் தான் தீர்க்க முற்பட வேண்டும்.  உலகில் பல மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்களுக்கிடையிலும், தேசங்களுக்கிடையிலும் பல மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் இடம்பெற்றதும் அரசியல் ரீதியான மோதலாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் மோதலுக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது என்று பாலஸ்தீன இஸ்ரேல் மோதல் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனால், அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்நாட்டில் அரசியல் மோதல் இடம்பெற்றபோது, இராணுவத்தின் ஊடாகவே தீர்வு வழங்கப்பட்டது. வன்முறைகள் ஒருபோதும் தீர்வாகாது. – இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.