மின்சாரக்கட்டணத்தை செலவுகளுக்குப் பொருந்தும் வகையில் பேண வேண்டியது அவசியம் – சர்வதேச நாணய நிதியம்

மின்சாரக்கட்டணத்தை செலவுகளுக்குப் பொருந்தும் வகையில் பேண வேண்டியது அவசியமான விடயமாகுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதித் தலைவர் கத்ஸ்யரினா ஸ்விரிட்சென்கா வலியுறுத்தியுள்ளார்.

வொஷிங்டனில் நடைபெற்ற நிகழ்நிலை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சாரம் தொடர்பான நட்டத்தினை ஈடுசெய்வதற்கான துரித நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

அவ்வாறு இல்லாது விட்டால் வரிசெலுத்துபவர்கள், சமூகத்தில் ஆபத்தினை எதிர்நோக்கும் தரப்பினருக்கு அதுசுமையாக அமைந்து விடும். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்களிலும் அது முக்கியமானதொரு அங்கமாகும்.

வரிசெலுத்துபவர்களின் மீதான சுமையைக் குறைப்பதற்கு வலுவான சமூகப்பாதுகாப்பொன்றே இருக்க வேண்டும். மின்சாரத்துறையும் செயற்றிறன் மிக்கதாக அமைய வேண்டும்.

அரசுரீதியான தொழில்முயற்சிகளை மேற்கொள்வதற்கு அமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் மத்தியகால, நெடுக்காலத்துக்கு ஏற்றவகையில் மின்சார செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையின் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகவே அப்பணிகள் கிரமமாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்