ஹரீன் மற்றும் மனுஷவின் மனுக்கள் ஒத்தி வைப்பு!
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் நீதிபதிகள் ஆஜராகாததால், சம்பந்தப்பட்ட மனுவின் விசாரணை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுஷ நாணயக்கார மற்றும் அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
எந்தவொரு நியாயமான விசாரணையும் இன்றி தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த முடிவு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண தங்களால் இயன்றதைச் செய்யும் வகையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதாக இருவரும் தெரிவித்திருந்தனர்.
பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா செய்ததை அடுத்து, அவர்கள் இருவரும் 2022 ஜூலை 9 ஆம் திகதி ஏனைய அமைச்சரவையுடன் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர்.
எவ்வாறாயினும், அவர்கள் இருவரும் 2022 ஜூலை 22 அன்று புதிய அமைச்சரவை நியமனத்தில் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மீண்டும் அதே அமைச்சுக்கு நியமிக்கப்பட்டனர்
கருத்துக்களேதுமில்லை