சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கிளி. மாவட்ட செயலகம் உதவி!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமது உற்பத்திகளைச்  சந்தைப்படுத்த முடியாமல் தவித்துவந்த உற்பத்தியாளர்களுக்கு,  மாவட்ட அரசாங்க அதிபரின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சனி, ஞாயிறு தினங்களிலும் விசேட சந்தை வாய்ப்பை வழங்கி தம்மை மேலும்  ஊக்கப்படுத்துமாறு சுயதொழில் முயற்சியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்