சீனாவின் சி யான் 6 ஆராய்ச்சி கப்பல் இன்று கொழும்பு வருகின்றது

புவிசார் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள சீனாவின் சியான் ஆறு ஆராய்;ச்சிக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை உறுதி செய்துள்ளார்.

இந்தியாவிற்கு கரிசனையை ஏற்படுத்தியுள்ள கப்பல் இன்று கொழும்புமுறைமுகத்தை வந்தடையும்..

முன்னதாக இந்த கப்பல் நவம்பர் மாதம் இலங்கை வருவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும் சீனா ஒக்டோபரில் இந்த கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை கோரியிருந்தது.

கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் சீனாவின் ஆராய்ச்சி கப்பலின் இலங்கை விஜயம் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டடிருந்த இந்தியா இந்த கப்பலி;ன் இலங்கை விஜயம் குறித்து கடும் கரிசனை வெளியிட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்துசமுத்திரத்தின் கடலில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் திறன் சீன கப்பலிற்கு உள்ளதை சுட்டிக்காட்டி இந்தியா பல தடவை கரிசனை வெளியிட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சிகள் சீனாவின் நீர்மூழ்கிகள் இந்து சமுத்திரத்தில் செயற்படுவதற்கு மிகவும் அவசியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.