சிறுநீரக நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் இயந்திரம் பதுளை போதனாவுக்கு கையளிப்பு! ஐ.ஓ.சி. நிறுவன நிதி அனுசரணையில்

லங்கா ஐஓசி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் தீபக் தாஸின் உதவியுடன் பதுளை போதனா  வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் னுயைடலளளை இயந்திரமொன்று இன்று  கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானால் கையளிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான் –

ஐஓசி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் தீபக் தாஸின் உதவியுடன் இந்த இயந்திரத்தை நன்கொடையாக வழங்கி வைத்தோம்.

இந்த இயந்திரம் சிறுநீரக நோயாளிகளை குணப்படுத்துவதற்கு அவசர தேவையாக இருந்தது என்றும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

இந்நிகழ்வில், இ.தொ.கா.வின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.வி.சென்னன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்