சி.வி.கே சிவஞானம் தலைமையில் புதிய குழு – யாழ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்க அனுமதி வழங்குவதற்கு முன்னர் அவை தொடர்பாக ஆராயவே சி.வி.கே. சிவஞானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழுவின் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் காணிகளை ஒதுக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.