பாடசாலை கீதங்கள் தமிழ் மொழியில் அமைய வேண்டும் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

மாணவர்கள் இலகுவாகப் புரிந்துகொண்டு பின்பற்றக்கூடிய  வகையில் பாடசாலை கீதங்கள் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மத்திய கல்லூரியின் கீதம் தமிழ் மொழிக்கு மாற்றப்படுவதுடன் ஏனைய தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் (ஸ்மார்ட்) வகுப்பறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கல்லூரியின் பழைய மாணவனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி கற்ற காலத்தில் அர்த்தம் புரிந்துகொள்ளாமல் கல்லூரிக் கீதத்தை மனனம் செய்து பாடியதாகத் தெரிவித்ததுடன், கீதத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்கின்ற போதே, உணர்வு ரீதியான பிணைப்பையும் அர்ப்பணிப்பு மனப்பக்குவத்தையும் மாணவர்கள் பெற்றுக் கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.