காட்டில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளால் பரபரப்பு!

மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை பிற்பகல் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த எலும்புகள் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படாமல் உள்ள நிலையில், அவை சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையதாக இருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.