யாழிலுள்ள மதுபானசாலைகள் பற்றிய விவரங்கள் தகவலறியும் சட்டமூலமூடாக கேட்டும் பதிலில்லை! சிறிதரன் குற்றச்சாட்டு
யாழ்.மாவட்டத்தில் எத்தனை மதுபான சாலைகள் உள்ளன என தகவலறியும் சட்டமூலம் ஊடாக கேட்டும் பதில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றபோது மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டவேளை அவர் இதனைத் தெரிவித்தார் .
மதுவரிதிணைக்களத்தின் செயற்பாடுகள் செயலற்று இருக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள்.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் உடுப்பிட்டியில் சட்டவிரோதமாக வீடு ஒன்றில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொதுமக்களால் பொலஸாரிடமும் தெரியப்படுத்தியதாக கூறுகிறார்கள் எனினும் நடவடிக்கை எதுவுமில்லை எனத் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தகவலறியும் சட்டத்தின் மூலம் யாழ்.மாவட்டத்தில் மதுபான நிலையங்கள் தொடர்பாக முழுமையான விவரங்களை கேட்டபோதும் ஒன்றரை மாதமாகியும் கிடைக்கவில்லை.
அதேவேளை வடக்கு மாகாண ஆளுநர் சட்டவிரோத மதுபான சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டால் அரசாங் கத்திற்கு பண இழப்பு ஏற்படுகின்றது. எனவே உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை