நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம் என மக்களிடம் வரி அறவிடப்படுகின்றது – ஜீ.எல். பீரிஸ்

நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம் என மக்களிடம் வரி அறவிடப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்களால் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலை தற்போது உருவாகி இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டியது அத்தியாவசியம் என்றும் 2048 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பொருளாதாரம் உருவாக்கப்படும் என்று பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அடுத்த வேளை உணவுக்காக போராடும் மக்களிடம் 25 வருடங்களின் பின்னர் நடக்க போகும் விடயங்கள் குறித்து பேசுவதில் அர்த்தம் இருக்கின்றதா என்றும் ஜீ.எல். பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.