முதலீட்டாளர்கள் விரும்பாத இடமாக இலங்கை மின்கட்டண வரி அதிகரிப்பினால் மாறுகின்றது! திலும் அமுனுகம சாட்டை

அதிகரித்த மின்கட்டணங்கள்  வரிகள் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான செலவுகள் மிகவும் அதிகரித்து  செல்வதால் இலங்கை முதலீட்டாளர்கள் விரும்பாத இடமாக மாறிவருகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் இதன் காரணமாக இலங்கையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களை கேட்டுக்கொள்வது  புதிய சவாலாக மாறிவருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துவரும் மின்கட்டணமே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு  கேட்டுக்கொள்வதில் கடுமையான சவாலாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் வர்த்தக சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வர்த்தக நடவடிக்கைகளிற்கான செலவுகள் அதிகரிப்பதால் உள்ளுர் உற்பத்திகளால் வெளிநாட்டு சந்தையில் போட்டிபோட முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண அதிகரிப்பு குறித்து உங்கள் நிலைப்பாட்டையைN நானும் கொண்டுள்ளேன் இது எங்கள்  ஏற்றுமதிகளை பாதிக்கின்றது நாளாந்தம் அதிகரிக்கும் செலவுகள் முதலீட்டாளர்களை கொண்டுவரும் எங்கள் முயற்சிகளை சவால்மிகுந்தவையாக மாற்றுகின்றன ஏற்கனவே இங்கு முதலீடு செய்தவர்களை  தக்கவைப்பதும் சவால் மிகுந்ததாக காணப்படுகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.