பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் 118 இற்கு உடன் அறிவிக்க உத்தரவு! மீண்டும் தெரிவிக்கிறார் பொலிஸ் ஊடக பேச்சாளர்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு செய்ய விரும்பினால் 118 என்ற இலக்கத்துக்கு  அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த தொலைபேசி இலக்கம்  பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சால்  பராமரிக்கப்படுகிறது.

இந்த எண்ணுக்கு பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்