10 தூதுவர்கள் புதிதாக நியமனம்

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)எகண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

லெட்வியா இராச்சியம், பிலிபைன்ஸ், கம்போடியா, போர்த்துக்கல் குடியரசு, சிரினாம் குடியரசு, ஜிபூட்டி குடியரசு, அங்கோலா குடியரசு, பின்லாந்து குடியரசு , பொலிவேரியன் குடியரசு,வெனிசுலா மற்றும் நோர்வே குடியரசு ஆகிய நாடுகளுக்காக இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நற்சான்றிதழ்கள் கையளித்த புதிய தூதுவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1- ஜூரிஸ் பொன் – லெட்வியா குடியரசு தூதுவர்

2- லியோ டிட்டோ அவுசன் – பிலிபைன்ஸ் குடியரசு தூதுவர்

3. கே குவாங் – கம்போடியா இராச்சிய தூதுவர்

4. ஜோவா மெனுவல் மென்தெஸ் டி அல்மெய்தா- போர்த்துக்கல் குடியரசு தூதுவர்

5. அருண்குமர் ஹர்டியன் – சிரினாம் குடியரசு தூதுவர்

6. இஸ்ஸே அத்துல்லாகி அசோவே – ஜிபூட்டி குடியரசு தூதுவர்

7. கிளெமென்டே பெட்ரோ கெமென்ஹா – அங்கோலா குடியரசு தூதுவர்

8. கிம்மோ லஹ்டெவிர்தா – பின்லாந்து குடியரசு தூதுவர்

9. கபயா ரோட்ரிகுவே கொன்சலேஸ் – வெனிசூலா பொலிவேரியன் குடியரசு தூதுவர்

10. மே-எலின் ஸ்டெனர் – நோர்வே இராச்சியம் தூதுவர்

இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்