எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் சீன குழு வடக்கிற்கு விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வரவேற்றதுடன்இ அவருடைய தலைமையில் சீன அரசாங்கத்தால் வடக்கு மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்ட்டது.

இதன்போது சீனத் தூதுவர் கீ சென்ஹொங்இ சீன அரசாங்கத்தின் வவுனியா மாவட்டத்திற்கான நிவாரண உதவித் திட்டத்தை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா மாவட்டத்தின் வவுனியாஇ வவுனியா தெற்கு உள்ளடங்களாக 4 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 500 குடும்பங்களுக்கு சீனாவால் 7500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டன.

சீன பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த மக்களால் வழங்கப்படும் குறித்த உலர் உணவுப் பொருள்களை சீனா – இலங்கை பௌத்த நட்புறவுத் திட்டத்தின் கீழ் சீனத் தூதுவர் உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.