தனி நபரின் அதிகாரத்துக்குள் நாட்டை வைத்திருப்பதே ஜனாதிபதியின் நோக்கம்!

நாட்டில் எந்தத் தேர்தலையும் நடத்தாமல் காலத்தை வீணடிப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கபபட்டுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா போன்ற விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று தேர்தலை பிற்போடும் செயற்பாடுகளையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டை தனி நபரின் அதிகாரத்திற்குள் வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளையே முன்னெடுத்துள்ளதாகவும் தற்போது சர்வதிகார ஆட்சியே நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில்இ நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சியாளர்கள் ஆட்சியமைக்க வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.