சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடைவிதித்தால் 225 உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் அமைச்சர் காஞ்சன எச்சரிக்கை
கிரிக்கெட் சபை தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடை விதித்தால் அதன் பொறுப்பை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகார சபையின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய சட்டக் கட்டமைப்பை சட்டமூலம் ஊடாக அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
இலங்கை கிரிக்கெட் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை உபகுழுவின் நோக்கம் தேசிய அணியையோ அல்லது நிர்வாகத்தையோ தேர்ந்தெடுப்பது அல்ல. கிரிக்கெட் சபைக்கு புதிய யாப்பை உருவாக்கி அதனை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கேயாகும்.
இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் இங்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரசபையின் தலைவர் உட்பட நிர்வாக சபைiயை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடை விதிக்க முடிவு செய்தால் அதற்கு இந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பு கூற வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை