கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!
கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று கிளிநொச்சி பொலிஸார், மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல்கள் கோடாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை