அரசியல்வாதிகள் தலையிடாதவாறு சட்டம் இயற்றப்பட வேண்டும் : இரா. சாணக்கியன்!

இலங்கை கிரிக்கெட்டின் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடவே முடியாதவாறு சட்டங்கள் இயற்றப்படுமானால் அதற்கு ஆதரவளிப்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை கிரிக்கெட்டின் நிலைமையும் நாட்டின் நிலைமையும் ஒன்றாகத் தான் இன்று இருக்கிறது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இடைக்கால குழுவொன்றை தற்போது நியமிக்க முடியுமாக இருந்தால், ஏன் இதற்கு முன்பே இடைக்கால குழுவை அமைச்சர் நியமிக்கவில்லை?

அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட்டில், அரசியல்வாதிகள் தலையிடவே முடியாது.

அப்படியானதொரு சட்டம் கொண்டுவரப்படுமானால், நாமும் நிச்சயமாக ஆதரவு வழங்குவோம்.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தினால் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடாது” என சாணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.