யாழ். கொடிகாமத்தில் விபத்து : சாரதி படுகாயம் !

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் – புத்தூர் சந்திக்கிடையே இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.