இலஞ்சக் குற்றச்சாட்டு : மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகேவின் சேவை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலஞ்ச விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுருத்த பொல்கம்பால உள்ளிட்ட மூவர் இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவரை பணியிலிருந்து இடைநிறுத்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கப்பலிலிருந்து அகற்றப்பட்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதியைப் பெறுவதற்கு இலஞ்சம் கோரப்பட்டமை தொடர்பில்  பிரபல தொழிலதிபர் ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.