கிளிநொச்சியில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கிளிநொச்சி நகர் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் உள்ளூர் வீதிகளில் மழை நீர் குறுக்கறுத்து பாய்ந்து ஓடுவதால் வீதியில் பயணிப்போர் கடும் சிரமத்திற்கு மத்தியில் செல்வதை அவதானிக்க முடிந்தது.

பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், சிறுதானியப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்