அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு இலாபமீட்ட பல வேலைத்திட்டங்கள்! அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கவனம்
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 15 வீதத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமாக வைத்திருக்கும் போதிலும், இதுவரை எந்த இலாபமும் ஈட்டப்படவில்லை என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், துறைமுகத்தின் மூலம் வருமானம் பெறும் வகையில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கொள்கலன் மறு ஏற்றுமதி திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்களை அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு ஈர்க்கும் செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுக அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை