இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான 3 மனுக்கள் ஜனவரி 31ஆம் திகதி விசாரணைக்கு!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை ஜனவரி 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் ஆசா தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு விவாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 31 ஆம் திகதி நிர்ணயம் செய்து உத்தரவிட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்