கொங்கிறீட் தூண் சரிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயம்- ஒருவர் உயிழப்பு!

வெல்லம்பிட்டிய – வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று (புதன்கிழமை) பாடசாலை நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள கொங்கிறீட் தூண் சரிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளதோடு ஒரு மாணவன் உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் ஆறு அடி உயரத்தில் இருந்த கொங்கிறீட் தட்டின் ஒரு பகுதியே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.

இதேவேளை காயமடைந்தவர்களில் இரண்டு மாணவிகளும் அடங்குகின்றனர். இவர்கள் முதலாம் தரத்தில் கல்விப்பயிலும் 6 வயதானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்தவர்களில் ஐவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்