கடந்த 2 ஆண்டுகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு 17 சிறுவர்கள் கொலை – துஷ் விக்கிரமநாயக்க

இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு 17 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறுவர்கள் மீதான வன்முறைகளை நிறுத்துங்கள் அமைப்பின் தலைவர் துஷ் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு இதுவரை முறையான தண்டனை வழங்கப்படவில்லை என்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளை நிறுத்துங்கள் அமைப்பின் தலைவர் துஷ் விக்கிரமநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

வன்முறையற்ற பாடசாலைச் சூழலை உருவாக்குவதற்கான ‘பாதுகாப்பான பாடசாலைத் திட்டம்’ என்ற தொனிப்பொருளிலில் ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்