தொழில் நிமித்தம் கம்பஹா சென்ற யாழ். குடும்பஸ்தரை காணவில்லை!

தொழில் நிமித்தனம் கம்பஹா சென்ற தனது கணவருடன் இதுவரை எவ்வித தொடர்பும் இல்லையென அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று கம்பஹா மாவட்டத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன்  வடக்கைச் சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் எனும் 38 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி மருதங்கேணி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து  கடந்த 28 ஆம் திகதி கம்பஹாவிற்கு சென்றுள்ளதாகவும்,  அங்கு தொடர்ந்தும் வேலை செய்து வருவதாகவும் கடந்த மாதம் 30 ஆம் திகதி காணாமல்போன குறித்த நபர் தன்னுடன் பேசியதாக மனைவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 30 ஆம் திகதி முதல் இன்றுவரை தனது கணவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என மனைவி தெரிவித்துள்ளதுடன் தனது கணவரைக் கண்டுபிடித்துத் தர ஆவண செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தகவல் தெரிந்தவர்கள் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 94 77 363 3578 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தரவும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.