இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி!

இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி புனேயில் இடம்பெற்று வருகின்றது,

‘மித்ரா சக்தி -2023’ எனும் கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

120 வீரர்களைக் கொண்ட இந்திய படைப்பிரிவில் மராத்தா தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளதுடன் இலங்கை தரப்பில் 53 தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய விமானப்படையை சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை விமானப்படையை சேர்ந்த 5 வீரர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கூட்டு எதிர்வினைகளை ஒருங்கிணைப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.