நாவலபிட்டியில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 8 பேர் படு காயம்!

ஹற்றன் பிரதேசத்தில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த உழவு இயந்திரம் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைத்துள்ளனர்.

இந்த விபத்து சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள பின்புற பெட்டிப் பகுதி இயந்திரத்தை விட்டு கழன்று வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என ஹற்றன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.