இலங்கையின் அரசியல் நிலைமை தொடர்பில் ஜே.வி.பி. – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தற்போது எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்தனர். இதன்போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தற்போது எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் நீண்ட நேரம் கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

இந்த உரையாடலில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் எல்டோஸ் மத்யூவும் கலந்துகொண்டார்.

அதேவேளை ஜே.வி.பியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் என்னுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்