அமைச்சர் ரொஷானின் பாதுகாப்பு அதிகரிப்பு: 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில்!

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மைக்காலமாக தனது பாதுகாப்பு தொடர்பில் விசேட கரிசனைகளை வெளியிட்டதோடு, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்திலும் விசேட கூற்று ஒன்றின் ஊடாக பாதுகாப்புக் கரிசனைகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் டிரான் அலஸ் பதிலளிக்கையில் –

அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனைகளை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது பத்து பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு பணிக்குழாம் வழங்கப்பட்டுள்ளது. – என்றார்.

இதேவேளை, அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புக்காகக் குறைந்த பட்சம் ஏழு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். அமைச்சர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது எனக் கோரிக்கை விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதற்கமைய விளையாட்டுத்துறை அமைச்சரின் பாதுகாப்புக்குக் கூடுதலாக மூன்று பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், தற்போது அவரது பாதுகாப்புக்காக 10 பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார். (05)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.