எம்.பிக்கள் மீது பாயும் புதிய சட்டம்!

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் அநாகரிகமான செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக”  நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்களிடம் பல விமர்சனங்கள் உள்ளன.நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியின் கெளரவத்தைப் பாதுகாக்காவிடின், அந்த உறுப்பினரின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு  புதிய சட்ட மூலத்தில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” இவ்வாறு விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்