ரயிலிலிருந்து வீழ்ந்து மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவனின் உடலுறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்த பெற்றோர்!

மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பதற்கு அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.

வெயாங்கொடை மாலிகதென்ன பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உறுப்புகளே இவ்வாறு தானமாக வழங்கப்படவுள்ளன.

23 வயதான இசங்க ரணசிங்க என்ற இந்தப் பல்கலை மாணவன் ரயிலில் பயணித்தபோது தெமட்டகொட மற்றும் களனி நிலையங்களுக்கு இடையில் ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து வைத்தியர்கள் பரிசோதனை நடத்தியபோது மாணவன் மூளைச்சாவடைந்து விட்டதாக வைத்தியர்கள் மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

வைத்தியர்களின் இந்த அறிவித்தலையடுத்து, இசங்காவின் அனைத்து உறுப்புக்களையும் தானமாக வழங்குவதற்கு இசங்காவின் பெற்றோர்கள் வைத்தியர்களிடம் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்